[பெட்ட குரும்பா மொழி] தனித்தன்மை அறிவிப்பு

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது 07-08-2020 பதிப்பு எண் 1.3


1. அறிமுகம்

பெட்ட குரும்பா மொழி எங்களது சமூகத்தின் ஒரு அங்கமாகத் தேர்வுசெய்தமைக்கு நன்றி. உங்கள் தனிப்பட்ட தகவல்களையும், தனித்தன்மைக்கான உங்கள் உரிமையையும் பாதுகாத்திட நாங்கள் கமைப்பட்டுள்ளோம். எங்கள் கொள்கைகள் அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பற்றிய எங்கள் நடைமுறைகளைக் குறித்து உங்களுக்கு ஏதாவது கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், தயவுசெய்து எங்களை info@bettakurumba.org.in இல் தொடர்புகொள்ளவும்.

நீங்கள் எங்கள் இணையதளத்தைப் பார்வையிடும்போது [ www.bettakurumba.org.in ] (இனிமேலும் “தளம்” என்று குறிப்பிடப்படும்) எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட தகவல்களை எங்களுக்கு வழங்கும்போது, உங்கள் தனித்தன்மையை மிகவும் முக்கியத்தும் வாய்ந்ததாகக் கருதி, நீங்கள் எங்களிடம் வழங்கிய தகவல்களை பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் செய்கிறோம். இந்தத் தனித்தன்மை அறிவிப்பில் எங்கள் தனித்தன்மைக் கொள்கையை விவரிக்கிறோம். நாங்கள் எந்தத் தகவலைச் சேகரிக்கிறோம், அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம், அது தொடர்பாக உங்களுக்கு என்ன உரிமைகள் உள்ளன என்பவற்றை நாங்கள் உங்களுக்கு தெளிவான சொற்களில் விளக்க முயற்சிக்கிறோம். அவற்றைக் கவனமாக வாசிக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தத் தனித்தன்மைக் கொள்கையில் நீங்கள் ஏற்றுக்கொள்ளாத விதிமுறைகள் ஏதேனும் இருந்தால், தயவுசெய்து எங்களது தளத்தையும் எங்கள் சேவைகளையும் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.

எங்கள் வலைதளங்கள் ( https://www.bettakurumba.org.in) போன்றவை) மற்றும் / அல்லது அவை தொடர்புடைய சேவைகள், விற்பனை, சந்தைப்படுத்துதல் அல்லது நிகழ்வுகள் அனைத்திற்கும் இந்தத் தனித்தன்மைக் கொள்கை பொருந்தும். (இந்தத் தனித்தன்மைக் கொள்கையில் அவற்றை நாங்கள் கூட்டாக “தளங்கள்” என்று குறிப்பிடுகிறோம்.)

தயவுசெய்து இந்தத் தனித்தன்மைக் கொள்கையைக் கவனமாக வாசிப்பது உங்களது தனிப்பட்ட தகவல்களை எங்களோடு பகிர்ந்துகொள்வதைக் குறித்து தகவலறிந்த தீர்மானங்ளை நீங்கள் எடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

 

2. உள்ளடக்க அட்டவணை

அறிமுகம் 1

உள்ளடக்க அட்டவணை 2

நாங்கள் என்ன தகவல்களை சேகரிக்கிறோம்? 3

எங்களது இணையதளம் 3

சமூக தரவுகள் 3

நீங்கள் எங்களிடம் அளிக்கும் தனிப்பட்ட தகவல்கள் 3

தானாக சேகரிக்கப்படும் தகவல்கள் 4

உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? 4

எங்களது இணையதளம் 4

சமூக தரவுகள் 5

தனிப்பட்ட தரவுகள் 5

உங்கள் தகவல்கள் யாருடனும் பகிரப்படுமா? 7

நாங்கள் குக்கீகளையும் பிற டிராக்கிங் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறோமா? 9

உங்கள் தகவல்கள் சர்வதேச அளவில் பரிமாற்றப்படுகிறதா? 9

மூன்றாம் தரப்பு இணையதளங்களைக் குறித்து எங்களுடைய நிலை என்ன? 10

உங்கள் தகவல்களை நாங்கள் எவ்வளவு காலம் வைத்திருப்போம்? 10

உங்கள் தகவல்களை நாங்கள் எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்? 11

வயதுவராப்பருவத்தினரிடமிருந்து தகவல்களை சேகரிக்கிறோமா? 11

உங்கள் தனித்தன்மை உரிமைகள் என்ன? 12

கணக்கு விபரம் 12

இந்தக் கொள்கைகளில் நாங்கள் புதுப்பிப்புகளைச் செய்கிறோமா? 13

இந்தக் கொள்கையைப் பற்றி எங்களை எவ்வாறு தொடர்புகொள்ள முடியும்? 14

 

3. நாங்கள் என்ன தகவல்களை சேகரிக்கிறோம்?

எங்களது வலைதளம் 3 வகையான தரவுகளைக் கொண்டுள்ளது.

1. எங்கள் வலைதளம், தொழில்நுட்பம், மூல குறியீடு, மற்றும் சம்பந்தமான கலைப்பொருட்கள் உட்பட.

2. சமூக தரவு, பொதுவெளியில் வெளியிடுவதற்காக தன்னார்வ பங்கேற்பாளர்களின் மூலம் கிடைத்திடும் பங்களிப்புகள்.

3. பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு பயனரின் தனிப்பட்ட தகவல்கள், பயனர்கள் தளங்களுக்குள் நுழையத்தேவையான சரிபார்க்கப்பட்ட மற்றும் செல்லும்படியாகும் உள்நுழைவு விபரங்கள்

எங்களது இணையதளம்

சுருக்கமாக: இந்த இணையதளம் தொழில்நுட்ப தளம், மூல குறியீடு, மற்றும் சம்பந்தமான கலைப்பொருட்களை உள்ளடக்கியது.

எங்களது இணையதளம் சமூகத்தின் வளமான கலாச்சாரத்தைப் பங்களிக்கவும், அதனை வளர்க்கவும் அனுமதிக்க உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும். இந்த இணையதளத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப தளம், மூல குறியீடு, மற்றும் பிற சம்பந்தமான கலைப்பொருட்கள் ஆகியவை இதில் அடங்கும்.

சமூக தரவுகள்

சுருக்கமாக: கலாச்சாரம் பற்றிய தகவல்கள் மற்றும் மொழி தொடர்பான தகவல்களைக் குறித்த கட்டுரைகள் தாமாக முன்வந்து பங்களிக்கப்பட்டவை.

இந்த வலைதளத்திற்குப் பங்களிப்பவர்கள் கலாச்சாரம் பற்றிய தகவல்கள் மற்றும் மொழி தொடர்பான தகவல்களைக் குறித்த கட்டுரைகளை தாமாக முன்வந்து வழங்குகிறார்கள். இந்தக் கட்டுரைகள் சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றைக் குறித்த நுண்ணறிவை வழங்கும் தகவல்கள் எழுத்து அல்லது பல்லூடக வடிவத்தில் இருக்கலாம்.

நீங்கள் எங்களிடம் அளிக்கும் தனிப்பட்ட தகவல்கள்

சுருக்கமாக: பெயர், முகவரி, தொடர்பு, கடவுச்சொற்கள் மற்றும் பாதுகாப்புத் தரவு நீங்கள் எங்களிடம் அளிக்கும் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்.

தளங்கள் அல்லது பயன்பாடுகளில் (apps) பதிவுசெய்யும்போது, எங்களைப் பற்றிய அல்லது எங்களது சேவைகளைப் பற்றிய தகவல்களைப் பெறுவதில் நீங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தும்போது, தளங்களிலுள்ள செயல்பாடுகளில் பங்கேற்கும்போது (எங்கள் இணையதள மன்றங்களில் செய்திகளை இடுகையிடுவது அல்லது போட்டிகளில் நுழைவது, தேர்வுகள், பரிசுகள் போன்றவை) அல்லது எங்களைத் தொடர்புகொள்ள முயற்சிக்கும்போது, நீங்கள் தானாக முன்வந்து எங்களுக்கு வழங்கும் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்.

பெயர் மற்றும் தொடர்பு பற்றிய தரவு. உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், புகைப்படங்கள் மற்றும் இதை ஒத்த பிற தொடர்பு சம்பந்தமான தரவுகளை நாங்கள் சேகரிக்கிறோம்.

சான்றுகள். அங்கீகாரம் மற்றும் கணக்கு அணுகலுக்குப் பயன்படுத்தப்படும் கடவுச்சொற்கள், கடவுச்சொல் குறிப்புகள், மற்றும் இதை ஒத்த பாதுகாப்பு சம்பந்தமான தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்.

தானாக சேகரிக்கப்படும் தகவல்கள்

சுருக்கமாக: இணைய நெறிமுறை முகவரி மற்றும் / அல்லது இணைய உலாவி மற்றும் சாதனத்தின் பண்புகள் போன்ற சில தகவல்கள் நீங்கள் எங்களது இணையதளத்தைப் பார்வையிடும்போது தானாக சேகரிக்கப்படும்.

நீங்கள் எங்களது இணையதளத்தைப் பார்வையிடும்போது, பயன்படுத்தும்போது, உள்செல்லும்போது சில குறிப்பிட்ட தகவல்களை நாங்கள் தானாகவே சேகரிக்கிறோம். இந்தத் தகவல் உங்களைக் குறித்த தனிப்பட்ட தகவல்களை (பெயர், தொடர்புக்கான தகவல்கள் போன்றவை) வெளிப்படுத்துவதில்லை. ஆனால் உங்கள் சாதனம் மற்றும் பயன்பாட்டைக் குறிக்கும் தகவல்களான இணையநெறிமுறை முகவரி, இணையஉலாவி மற்றும் சாதனத்தின் பண்புகள், இயங்குதளம், மொழிவிருப்பத்தேர்வுகள், ருசுடுகளைக் குறிப்பிடும் காரியங்கள், சாதனத்தின் பெயர், நாடு, இருப்பிடம் போன்றவையையும், எங்கள் தளத்தையும் பிற தொழில்நுட்ப தகவல்களையும் நீங்கள் எப்போது மற்றும் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றிய தகவல்களையும் கொண்டிருக்கலாம். இந்தத் தகவல்கள் முதன்மையாக எங்கள் தளங்களின் பாதுகாப்பையும், செயல்பாட்டையும் பராமரிக்கவும், எங்கள் உள்ளார்ந்த பகுப்பாய்வு மற்றும் அறிக்கையிடல் நோக்கங்களுக்காகவும் தேவைப்படுகின்றது.

நாங்கள் குக்கீகள் மற்றும் அதையொத்த தொழில்நுட்பங்கள் மூலம் தகவல்களைச் சேகரிப்பதில்லை, ஆனால் நாங்கள் பயன்படுத்தும் சில தொழில்நுட்பங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு சேவைகளால் அவைகள் பயன்படுத்தப்படுகின்றன. நாங்கள் தரவுகளை அணுகவோ, செயலாக்குவதோ இல்லை, ஆனால் அத்தகைய தொழில்நுட்பங்கள் வழங்கும் சேவைகள் அவற்றைப் பயன்படுத்துகின்றன.

4. உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?

எங்களது இணையதளம்

சுருக்கமாக: இந்த இணையதளம் நிர்மாண் சொசைட்டிக்குச் சொந்தமானது மற்றும் வழங்கப்பட்ட சேவைகளை இயக்க இது பயன்படுகிறது, அங்கீகரிக்கப்படாத நகலெடுப்பதற்கு அனுமதியில்லை. தரவுகள் (கட்டுரைகள், உள்ளடக்கம்) சமூகத்திற்கு சொந்தமானது மற்றும் இது சமூகத்தின் பொதுவான சொத்து.

எங்கள் வலைதளம் சமூகத்தின் வளமான கலாச்சாரத்தை பங்களிக்கவும், வளர்க்கவும் அனுமதிக்க மற்றும் வளப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும். இந்த வலைதளத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், மூலக் குறியீடுகள் மற்றும் பிற தொடர்புடைய கலைப்பொருட்கள் அடங்கிய தளம் ஆகிய அனைத்தும் நிர்மாண் சொசைட்டியின் சொத்து.

சமூக தரவுகள்

சுருக்கமாக: தளத்தின் மூலம் எங்களுக்கு பங்களிக்கப்பட்ட கட்டுரைகளின் விளம்பரத்தையும் வெளியீட்டையும் நாங்கள் வழங்குகிறோம்.

சமூகத்தின் பயனர்கள் தங்களது கலாச்சாரம் மற்றும் மொழியைப் பற்றிய கட்டுரைகள் மற்றும் பல்லூடக உள்ளடக்கங்களை சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் மொழியை வளமாக்கும் நோக்கத்திற்காகவும், எங்கள் சட்டப்பூர்வமான கடமைகளுக்கு இணங்கும்படியாகவும் பங்களிக்க ஒரு தளத்தை நாங்கள் வழங்குகிறோம். இந்த உள்ளடக்கம் எங்கள் தளங்களைப் பயன்படுத்தி வெளியிடப்படுகிறது. மொழியையும் சமூகத்தையும் வளர்ப்பதற்கான ஒட்டுமொத்த நோக்கத்தை அடைவதற்காக உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

உள்ளடக்கம் பங்காளிப்பாருக்கே சொந்தமானது, நிர்மாண் சொசைட்டிக்கல்ல. உள்ளடக்கத்தின் மறுஆய்வு மற்றும் வெளியீடு சமூகத்தின் உறுப்பினர்களால் செய்யப்படுகிறது. எனவே இந்தத் தரவுகளின் அனைத்து உரிமையும் பங்களிப்பாளரிடமும் சமூகத்தினரிடமும் உள்ளது, மேலும் இது பொது நுகர்வுக்கு இலவசமாக கிடைக்கிறது.

தனிப்பட்ட தரவுகள்

சுருக்கமாக: பங்காளிப்பாளர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காகவும் தேவைப்படும்போது தொடர்புகொள்ளவும், மற்றும் தளங்களில் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை விளம்பரப்படுத்தவும் சரிபார்ப்பு, மற்றும் பாதுகாப்பிற்காக தளத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகளை செயலாக்கப்படுத்துகிறோம்.

கீழே விவரிக்கப்பட்டுள்ள பல்வேறு இலாபநோக்கமற்ற நோக்கங்களுக்காக எங்கள் தளங்கள் மூலமாக சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தகவல்களை எங்களது நியாயமான கரிசனைகளை நம்பி, சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் மொழியை (“விளம்பரம்”), நீங்கள் (தன்னார்வம்), உங்கள் முழு மற்றும் சுயநினைவுள்ள ஒப்புதலுடன் (“ஒப்புதல்”) மற்றும் ஃ அல்லது எங்கள் சட்டப்பூர்வமான கடமைகளுக்கு இணங்க (“சட்ட காரணங்கள்”) செயலாக்குகிறோம். கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு நோக்கத்திற்காகவும் அடுத்ததாக நாங்கள் நம்பியுள்ள குறிப்பிட்ட செயலாக்க அடிப்படைகளைக் குறிப்பிடுகிறோம்.

நாங்கள் சேகரிக்கிற அல்லது பெறுகிற தகவல்களை இதற்காகப் பயன்படுத்துகிறோம்:

கணக்கு உருவாக்கம் மற்றும் உள்நுழைவு செயல்முறையை உங்கள் ஒப்புதலுடன் வழிநடத்திட. கணக்கு உருவாக்கம் மற்றும் உள்நுழைவு செயல்முறையை எளிதாக்க சேகரிக்க நீங்கள் அனுமதித்த தகவலை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

விளம்பர நோக்கங்களுக்காக விளம்பர தகவல்தொடர்புகளை உங்களுக்கு அனுப்பிட. நாங்கள் மற்றும் / அல்லது மூன்றாம் தரப்பு பங்காளிகள் நீங்கள் எங்களுக்கு அனுப்பும் தனிப்பட்ட தகவல்களை எந்தவொரு வணிக நோக்கங்களுக்காவும் பயன்படுத்தமாட்டோம்.

விளம்பர நோக்கங்களுக்காக மற்றும் / அல்லது சட்டரீதியான காரணங்களுக்காக நிர்வாக தகவல்களை உங்களுக்கு அனுப்ப. விளம்பரத்தகவல் மற்றும் ஃ அல்லது புதிய உள்ளடக்கத் தகவல் மற்றும் ஃ அல்லது எங்கள் விதிமுறைகள், நிபந்தனைகள், மற்றும் கொள்கைகளில் மாற்றங்கள் குறித்த தகவல்களை உங்களுக்கு அனுப்ப உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம்.

உங்கள் ஒப்புதலுடன் நற்சான்றுகளை இடுகையிட. தனிப்பட்ட தகவல்களைக் கொண்ட நற்சான்றுகளை எங்கள் தளங்களில் இடுகிறோம். ஒரு நற்சான்றினை நாங்கள் இடுகையிடுவதற்கு முன்பு, உங்கள் பெயரையும், நற்சான்றையும் பயன்படுத்திட உங்களது ஒப்புதலை நாங்கள் பெறுவோம். உங்களது நற்சான்றினைப் புதுப்பிக்கவோ அல்லது நீக்கிடவோ நீங்கள் விரும்பினால், info@bettakurumba.org.in என்ற முகவரியில் தயவுசெய்து எங்களை தொடர்புகொள்ளவும், அப்படியாகத் தொடர்புகொள்ளும்போது உங்களது பெயர், நற்சான்றின் இருப்பிடம், மற்றும் தொடர்புக்கான தகவல்களைச் சேர்க்க மறவாதீர்;கள்.

விளம்பர நோக்கங்களுக்காக மற்றும் / அல்லது உங்கள் சம்மதத்துடன் பரிசுக் குலுக்கல்கள் மற்றும் போட்டிகளை நிர்வகிக்க. போட்டிகளில் பங்கேற்க நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது, பரிசுக் குலுக்கல்கள் மற்றும் போட்டிகளை நிர்வகிக்க உங்களது தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம்.

விளம்பர நோக்கங்களுக்காக கருத்துகளைக் கோரிட. எங்கள் தளங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி உங்களிடம் கருத்துகளைக் கோரவும், உங்களைத் தொடர்புகொள்ளவும் உங்கள் தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம்.

விளம்பர நோக்கங்கள் மற்றும் / அல்லது சட்டரீதியான நோக்கங்களுக்காக எங்கள் தளங்களைப் பாதுகாக்க. எங்கள் தளங்களைப் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வைப்பதற்கான எங்கள் முயற்சிகளின் ஒரு பகுதியாக உங்கள் தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம் (உதாரணமாக, மோசடியைக் கண்காணிக்கவும், தடுக்கவும்).

விளம்பர நோக்கங்களுக்கு பயனரிடமிருந்து பயனருக்கு தகவல்தொடர்புகளை இயக்க. பயனரிடமிருந்து பயனருக்கு தகவல்தொடர்புகளை இயக்க உங்கள் தகவலை நாங்கள் பயன்படுத்தலாம்.

விளம்பர நோக்கங்கள் மற்றும் / அல்லது சட்டரீதியான காரணங்களுக்காக எங்கள் விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்த.

சட்ட கோரிக்கைகளுக்கு பதிலளிப்பது மற்றும் சட்ட காரணங்களுக்காக தீங்கு விளைவிப்பதைத் தடுப்பது. நாங்கள் சட்டப்பூர்வ கோரிக்கையைப் பெற்றால், எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நாங்கள் வைத்திருக்கும் தரவுகளை ஆய்வுசெய்ய வேண்டியிருக்கும்.

பிற விளம்பர நோக்கங்களுக்காக. தரவுப் பகுப்பாய்வு, பயன்பாட்டு போக்குகளை அடையாளம் காண்பது, எங்கள் விளம்பர பிரச்சாரங்களின் செயல்திறனைத் தீர்மானித்தல் மற்றும் எங்கள் தளங்கள், தயாரிப்புகள், சேவைகள், சந்தைப்படுத்துதல் மற்றும் உங்கள் அனுபவத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பிற விளம்பர நோக்கங்களுக்காக உங்கள் தகவலை நாங்கள் பயன்படுத்தலாம்.

 

5. உங்கள் தகவல்கள் யாருடனும் பகிரப்படுமா?

சுருக்கமாக: நாங்கள் உங்கள் ஒப்புதலுடன், சட்டங்களுக்கு உட்பட்டு, உங்கள் உரிமைகளைப் பாதுகாக்க அல்லது எங்கள் விளம்பரக் கடமைகளை நிறைவேற்ற மட்டுமே தகவல்களைப் பகிர்ந்து (“பகிர்”) கொள்கிறோம்.

பின்வரும் சூழ்நிலைகளில் மட்டுமே நாங்கள் உங்கள் தகவல்களைப் பகிரவும் வெளியிடவும் செய்கிறோம்.

சட்டங்களுக்கு இணங்குதல். அரசாங்கக் கோரிக்கைகள், நீதிமன்ற நடவடிக்தை, நீதிமன்ற உத்தரவு அல்லது சட்டசெயல்முறை (தேசிய பாதுகாப்பு அல்லது சட்ட அமலாக்கத் தேவைகளைப் பூர்த்திசெய்ய பொது அதிகாரிகளுக்குப் பதிலளிப்பது உட்பட) சட்டப்பூர்வத்தேவை இருக்கும் பட்சத்தில் சட்ட செயல்முறைகளுக்கு இணங்க நாங்கள் உங்கள் தகவல்களை வெளியிடலாம்.

முக்கிய ஆர்வங்கள் மற்றும் சட்டஉரிமைகள். எங்கள் கொள்கைகளின் சாத்தியமான மீறல்கள், சந்தேகத்திற்கிடமான மோசடி, எந்தவொரு நபரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு சாத்தியமான சூழ்நிலைகள் அல்லது நாங்கள் தொடர்புள்ள வழக்கு தொடர்பான ஆதாரங்களாக விசாரிக்க, தடுக்க அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று நாங்கள் நம்பும் இடத்தில் உங்கள் தகவல்களை நாங்கள் வெளியிடலாம்.

விற்பனையாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் பிற மூன்றாம் தரப்பு சேவைவழங்குநர்கள். எங்களுக்காக அல்லது எங்கள் சார்பாக சேவைகளைச் செய்யும் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள், சேவைவழங்குநர்கள், ஒப்பந்தக்காரர்கள் அல்லது முகவர்கள் அந்தப் பணியைச் செய்ய இதுபோன்ற தகவல்கள் தேவைப்படுவதால், அவர்களுடன் உங்கள் தரவை நாங்கள் பகிர்;ந்து கொள்ளலாம்;. எடுத்துக்காட்டுகள்: தரவுப் பகுப்பாய்வு, மின்னஞ்சல் ஒப்படைப்பு, தொகுப்பாளர் சேவைகள் வாடிக்கையாளர்சேவை மற்றும் சந்தைப்படுத்துதல் முயற்சிகள் உள்ளிட்டவை. தளங்களில் கண்காணிப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த குறிப்பிட்ட சில மூன்றாம் தரப்பினரை நாங்கள் அனுமதிக்கலாம். காலப்போக்கில் தளங்களுடன் நீங்கள் எவ்வாறு தொடர்புகொள்கிறீர்கள் என்பது குறித்த தரவைச் சேகரிக்க அவர்களுக்கு இது உதவும். மற்றவற்றுடன், இந்தத் தகவல்கள் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும், கண்காணிக்கவும், சில உள்ளடக்கத்தின் பிரசித்தியைத் தீர்மானிக்கவும், இணையவழி செயல்பாட்டை நன்கு புரிந்துகொள்ளவும் பயன்படுத்தப்படலாம். இந்தக் கொள்கையில் விவரிக்கப்படாதவகையில், உங்கள் எந்தவொரு தகவலையும் வணிக நோக்கங்களுக்காக நாங்கள் பகிரவோ, விற்கவோ, வாடகைக்கு விடவோ அல்லது வர்த்தகம் செய்யவோ மாட்டோம்.

வணிகப்பரிமாற்றங்கள். மற்றொரு நிறுவனத்திடம் எங்கள் நிறுவனத்தின் மொத்தப் பகுதியையோ அல்லது ஒரு பகுதியையோ இணைப்பு செய்யும்போதோ அல்லது விற்பனை செய்யும்போதோ, நிதியளிக்கும்போதோ அல்லது கையகப்படுத்தும்போதோ அல்லது அதற்கானப் பேச்சுவார்த்தையின்போதோ உங்கள் தகவல்களை நாங்கள் பகிர்ந்துகொள்ளவோ அல்லது பரிமாறவோ செய்யலாம்.

மூன்றாம் தரப்பு விளம்பரதாரர்கள். நீங்கள் தளங்களைப் பார்வையிடும்போது விளம்பரங்களை வழங்க மூன்றாம் தரப்பு விளம்பர நிறுவனங்களை நாங்கள் பயன்படுத்தலாம். உங்களுக்கு ஆர்வமுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த விளம்பரங்களை வழங்குவதற்காக இந்த நிறுவனங்கள் தளம் அல்லது தளங்கள் மற்றும் வலை குக்கீகள் மற்றும் பிற கண்காணிப்பு தொழில்நுட்பங்களில் உள்ள பிற வலைதளங்களுக்கான உங்கள் வருகையைப் பற்றிய தகவல்களைப் பயன்படுத்தலாம். (கீழே உள்ள எண் 6இல் உள்ள எங்கள் குக்கீ கொள்கைளைப் பார்க்கவும் - நாங்கள் குக்கீகளையும் பிற டிராக்கிங் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறோமா?)

இணைப்பாளர்கள். நாங்கள் உங்கள் தகவல்களை எங்கள் துணை நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அவ்வாறு செய்யும்பட்சத்தில் இந்தத் தனித்தன்மைக் கொள்கையை மதிக்கும்படி அந்த இணைப்பாளர்களைக் கோருவோம். எங்கள் பெற்றோர் நிறுவனம் மற்றும் எந்தவொரு துணை நிறுவனங்கள், கூட்டு நிறுவனப்பங்காளிகள் அல்லது நாங்கள் கட்டுப்படுத்தும் அல்லது எங்களுடன் கட்டுப்பாட்டிலுள்ள பிற நிறுவனங்கள் இந்த இணைப்பாளர்களில் அடங்கும்.

வணிகக்கூட்டாளர்கள். குறிப்பிட்ட தயாரிப்புகள், சேவைகள் அல்லது விளம்பரங்களை உங்களுக்கு வழங்க எங்கள் வணிகக்கூட்டாளர்களுடன் உங்கள் தகவல்களை நாங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

உங்கள் ஒப்புதலுடன். உங்கள் ஒப்புதலுடன் வேறு எந்த நோக்கத்திற்காகவும் உங்கள் தகவல்களை நாங்கள் வெளியிடலாம்.

பிற பயனர்கள். நீங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்போது (உதாரணமாக, தளங்களுக்கு கருத்துக்கள், பங்களிப்புகள் அல்லது பிற காரியங்களை இடுகையிடுவதன் மூலம்) அல்லது தளத்தின் பொதுப் பகுதிகளுடன் தொடர்புகொள்ளும்போது அத்தகைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்துப் பயனர்களாலும் பார்க்கப்படலாம் மற்றும் தளத்திற்கு வெளியே பொதுவில் விநியோகிக்கப்படலாம். எங்கள் தளங்களின் பிற பயனர்களுடன் நீங்கள் தொடர்புகொண்டு ஒரு சமூகவலைப்பின்னல் (பேஸ்புக் போன்றவை) மூலம் பதிவுசெய்தால் அந்த சமூகவலைப்பின்னலில் உள்ள உங்கள் தொடர்புகள் உங்கள் பெயர், சுயவிவரப்புகைப்படம் மற்றும் உங்கள் செயல்பாட்டின் விளக்கங்களைக் காணஇயலும். இதேபோல் பிற பயனர்கள் உங்கள் செயல்பாட்டின் விளக்கங்களைக் காணவும் எங்கள் தளங்களுக்குள் உங்களுடன் தொடர்புகொள்ளவும், உங்கள் சுயவிவரத்தைக் காணவும் முடியும்.

6. நாங்கள் குக்கீகளையும் பிற டிராக்கிங் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறோமா?

சுருக்கமாக: நாங்கள் உங்கள் தகவல்களைச் சேகரிக்கவும், அவைகளைச் சேமிக்கவும் குக்கீகளையும் பிற டிராக்கிங் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தலாம்.

தகவல்களை அணுகவோ அல்லது சேமிக்கவோ குக்கீகளையும் பிற டிராக்கிங் தொழில்நுட்பங்களையும் (வலை பீக்கான்கள் மற்றும் பிக்சல்கள் போன்றவை) பயன்படுத்தலாம். தொழில்நுட்ப சேவைகளைக் கொண்டுவர, மூன்றாம் தரப்பு கருவிகள் மற்றும் சேவைகளையும் நாங்கள் பயன்படுத்;துகிறோம். அவர்கள் குக்கீகள் மற்றும் ஒத்த தொழில்நுட்பங்களையும் சேகரிக்கக்கூடும். இவையெல்லாம் உங்களுக்கு சிறந்த சேவையை வழங்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆவணத்தில் குறிப்பாக சேர்க்கப்பட்டாலொழிய, உங்கள் தகவல்களை எந்தவொரு வணிக நோக்கங்களுக்காகவும் நாங்கள் பயன்படுத்தமாட்டோம். அந்தந்த நிறுவனங்களின் குக்கீ கொள்கைள் பொருந்தும்.

 

7. உங்கள் தகவல்கள் சர்வதேச அளவில் பரிமாற்றப்படுகிறதா?

சுருக்கமாக: உங்கள் தகவல்களை உங்கள் சொந்த நாட்டைத் தவிர வேறு நாடுகளில் நாங்கள் பரிமாறலாம், சேமிக்கலாம் மற்றும் செயலாக்கம் செய்யலாம்.

எங்கள் சேவையகங்கள் தொழில்நுட்ப அல்லது பொருளாதார காரணங்களுக்காக நாட்டிற்கு வெளியே அமைந்திருக்கலாம். எனவே எங்கள் தளங்களுக்கு பங்களித்த அனைத்து தரவகளும், இந்தியாவிலும் பிற நாடுகளிலும் உள்ள எங்கள் சேவையகங்களிலும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பகிர்ந்துகொள்ளக்கூடிய மூன்றாம் தரப்பினராலும் (மேலே “பகிர்”ஐப் பார்க்கவும்) பரிமாற்றப்படும், சேமிக்கப்படும், மற்றும் செயலாக்கப்படு;ம் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். இந்த நாடுகளில் விரிவான தரவு பாதுகாப்பு அல்லது பிற சட்டங்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த தனித்தன்மைக் கொள்கை மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்களின்படி உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.

 

8. மூன்றாம் தரப்பு இணையதளங்களைக் குறித்து எங்களுடைய நிலை என்ன?

சுருக்கமாக: எங்களுடன் இணைக்கப்படாத மூன்றாம் தரப்பு வழங்குநர்களுடன் நீங்கள் பகிரும் எந்தவொரு தகவலின் பாதுகாப்பிற்கும் நாங்கள் பொறுப்பல்ல.

எங்களுடன் இணைக்கப்படாத மூன்றாம் தரப்பினரின் விளம்பரங்களை தளங்கள் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், எங்கள் இணையதளத்தை அணுகும் செயல்பாட்டில், உங்கள் தரவை மூன்றாம் தரப்பு சேவைகளில் தரும்பட்சத்தில், அந்தத் தரவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. எந்த மூன்றாம் தரப்பினருக்கும் நீங்கள் வழங்கும் தரவுகளின் பாதுகாப்பு மற்றும் தனித்தன்மைக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கமுடியாது. மூன்றாம் தரப்பினரால் சேகரிக்கப்பட்ட எந்த தரவும் இந்தத் தனித்தன்மைக் கொள்கையின் கீழ்வராது. தளங்களுடன் இணைக்கப்பட்ட பிற வலைத்தளங்கள், சேவைகள் அல்லது பயன்பாடுகள் உட்பட எந்த மூன்றாம் தரப்பினரின் உள்ளடக்கம் அல்லது தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. அத்தகைய மூன்றாம் தரப்பினரின் கொள்கைகளை நீங்கள் மதிப்பாய்வு செய்து, உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்களை நேரடியாக தொடர்புகொள்ளவேண்டும்.

 

9. உங்கள் தகவல்களை நாங்கள் எவ்வளவு காலம் வைத்திருப்போம்?

சுருக்கமாக: சட்டத்தால் தேவைப்படாவிட்டால் இந்த தனித்தன்மைக் கொள்கையில் குறிப்பிட்டுக் காட்டப்பட்ட நோக்கங்களை நிறைவேற்ற தேவையானவரை உங்கள் தகவல்களை நாங்கள் வைத்திருப்போம்.

நீண்ட காலத்திற்கு தேவைப்படாவிட்டால் அல்லது சட்டத்தால் அனுமதிக்கப்படாவிட்டால் (வரி, கணக்கியல் அல்லது பிற சட்டத்தேவைகள் போன்றவை) இந்தத் தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்கு அவசியமானவரை மட்டுமே உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் வைத்திருப்போம்.

உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்குவதற்கு எங்களிடம் முறையான வணிகத்தேவை இல்லாதபோது, நாங்கள் அதை நீக்குவோம் அல்லது அடையாளம் அறியப்படாததாக்குவோம், அல்லது, இது முடியாவிட்டால் (உதாரணமாக உங்கள் தனிப்பட்ட தகவல்கள் ஆவணக்காப்பக நகல்களில் சேமிக்கப்பட்டுள்ளதால்), நாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் நீக்கப்படும்வரை, அது மேலும் செயல்படாதபடிக்கு தனிமைப்படுத்தி பாதுகாப்பாக சேமிப்போம்.

 

10. உங்கள் தகவல்களை நாங்கள் எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்?

சுருக்கமாக: நிறுவன மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

நாங்கள் செயலாக்கும் எந்தவொரு தனிப்பட்ட தகவலின் பாதுகாப்பையும் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட பொருத்தமான தொழில்நுட்ப மற்றும் நிறுவன பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். ஆயினும், இணையம் 100மூ பாதுகாப்பானது என்பதை எங்களால் உத்தரவாதம் அளிக்க இயலாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றாலும், எங்கள் தளங்களுக்கு தகவல்களை அனுப்புவதும், தளங்களிலிருந்து தகவல்களைப் பெறுவதன் முழுப்பொறுப்பும் உங்களுடையது மட்டுமே. நீங்கள் பாதுகாப்பான சூழலில் மட்டுமே சேவைகளை அணுகவேண்டும்.

 

11. வயதுவராப்பருவத்தினரிடமிருந்து தகவல்களை சேகரிக்கிறோமா?

சுருக்கமாக: 18 வயதிற்குட்ட குழந்தைகளிடத்திலிருந்து நாங்கள் தெரிந்தே தரவுகளைச் சேகரிப்பதோ அல்லது விற்பனை செய்வதோ கிடையாது.

18 வயதிற்குட்ட குழந்தைகளிடத்திலிருந்து நாங்கள் தெரிந்தே தரவுகளைக் கேட்பதோ அல்லது விற்பனை செய்வதோ கிடையாது. தளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் குறைந்தது 18 வயதுடையவர் அல்லது நீங்கள் ஒரு சிறியவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் என்பதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள், மேலும் இதுபோன்ற சிறியவர் தளத்தைப் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள். 18 வயதிற்கு குறைவான பயனர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் அறிந்தால், நாங்கள் கணக்கை செயலிழக்கச் செய்வோம், எங்கள் தரவுகளிலிருந்து அத்தகைய தரவை உடனடியாக நீக்க நியாயமான நடவடிக்கைகளை எடுப்போம். 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடமிருந்து நாங்கள் எந்தவொரு தகவலையும் சேகரித்ததாக நீங்கள் அறிந்தால், தயவுசெய்து எங்களை [info@bettakurumba.org.in] இல் தொடர்புகொள்ளவும்.

 

12. உங்கள் தனித்தன்மை உரிமைகள் என்ன?

சுருக்கமாக: தனித்தன்மை என்பது அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதி என்பதை இந்தியா அங்கீகரித்துள்ளது, ஆனாலும் தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்திற்காக இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது.

உங்கள் தனித்தன்மைக்கு அதிக உரிமைகளை அளித்திட சட்டம் உருவாகி வருகிறது. சில பிராந்தியங்களில் (ஐரோப்பிய பொருளாதாரப்பகுதி போன்றவை) பொருந்தக்கூடிய தரவு பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் உங்களுக்கு குறிப்பிட்ட உரிமைகள் உள்ளன. தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் உங்களுக்கு இருக்கும் குறிப்பிட்ட உரிமைகளை தெளிவுபடுத்தி வரையறுக்கும். விதிமுறைகள் இயற்றப்படும்போது இந்த உரிமைகள் புதுப்பிக்கப்படும். உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்குவதற்கு நாங்கள் உங்கள் சம்மதத்திற்காக சார்ந்திருந்தால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளலாம். ஆனாலும், உங்கள் ஒப்புதலின் மூலம் பெறப்பட்ட தரவுகளின் செயலாக்கத்தின் சட்டப்பூர்வமானதன்மையை இது பாதிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கணக்கு விபரம்

நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் கணக்கிலுள்ள தகவல்களை கீழ்க்கண்ட வழிகளில் மதிப்பாய்வு செய்யவோ, மாற்றவோ, அல்லது உங்கள் கணக்கை நிறுத்தவோ செய்யலாம்.

உங்கள் கணக்கு அமைப்புகளில் உள்நுழைந்து, உங்கள் கணக்கைப் புதுப்பித்தல்.

கீழே தரப்பட்டுள்ள தொடர்புக்கான தகவலைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்புகொள்ளுதல்.

உங்கள் கோரிக்கையின் பேரில் உங்கள் கணக்கை நிறுத்த, எங்கள் செயற்படும் தரவுத்தளங்களில் இருந்து உங்கள் கணக்கையும் தகவலையும் செயலிழக்கச் செய்வோம் அல்லது நீக்குவோம். ஆகினும் மோசடிகளைத் தடுக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும், எந்தவொரு விசாரணைக்கும் உதவிடவும் எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்த மற்றும் ஃ அல்லது சட்டத் தேவைகளுக்கிணங்க சில தகவல்கள் எங்கள் கோப்புகளில் தக்கவைக்கப்படலாம்.

குக்கீகள் மற்றும் ஒத்த தொழில்நுட்பங்கள்: பெரும்பாலான வலைஉலாவிகள் முன்னிருப்பாக குக்கீகளை ஏற்க அமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் விரும்பினால் குக்கீகளை அகற்றவோ அல்லது குக்கீகளை நிராகரிக்கவோ உங்கள் உலாவியை அமைக்க நீங்கள் வழக்கமாத் தேர்வுசெய்யலாம். குக்கீகளை அகற்றவோ அல்லது குக்கீகளை நிராகரிக்கவோ நீங்கள் தேர்வுசெய்தால், அது எங்கள் தளங்களின் சில அம்சங்கள் அல்லது சேவைகளைப் பாதிக்கக்கூடும்.

மின்னஞ்சல் சந்தைப்படுத்துதலிலிருந்து விலகுதல்: நாங்கள் அனுப்பும் மின்னஞ்சல்களில் உள்ள பதிவுநீக்கல் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ளப் பயன்படுத்தி எங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் எந்த நேரத்திலும் எங்கள் சந்தைப்படுத்துதல் மின்னஞ்சல் பட்டியலிலிருந்து நீங்கள் விலகலாம். அப்புறம் சந்தைப்படுத்துதல் மின்னஞ்சல் பட்டியலிலிருந்து நீங்கள் அகற்றப்படுவீர்கள் - ஆயினும் உங்கள் கணக்கினை நிர்வாகத்திற்கும், பயன்பாட்டிற்கும் தேவையான சேவை தொடர்பான மின்னஞ்சல்களை நாங்கள் உங்களுக்கு அனுப்ப வேண்டியதாயிருக்கும். கீழ்க்கண்ட வழிகளில் இதிலிருந்து விலகலாம்:

உங்கள் கணக்கை தளங்களில் பதிவுசெய்யும்போது, உங்கள் விருப்பத்தேர்வுகளைக் குறிப்பிடுவது.

உங்கள் கணக்கின் அமைப்புகளில் உள்நுழைந்து உங்கள் விருப்பத்தேர்வுகளைப் புதுப்பித்தல்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்புக்கான தகவலைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்புகொள்ளுதல்.

 

13. இந்தக் கொள்கைகளில் நாங்கள் புதுப்பிப்புகளைச் செய்கிறோமா?

சுருக்கமாக: ஆம். பொருத்தமான சட்டங்களுடன் இணக்கமாக இருந்திட, தேவையான போது இந்தக் கொள்கையை நாங்கள் புதுப்பிப்போம்.

இந்தத் தனித்தன்மைக் கொள்கையை நாங்கள் அவ்வப்போது புதுப்பிக்கலாம். புதுப்பிக்கப்பட்ட பதிப்பு, புதுப்பிக்கப்பட்ட “திருத்தப்பட்ட” தேதியால் குறிப்படப்படும், மேலும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு அணுக முடிந்தவுடன் பயன்பாட்டிற்கு வரும். இந்தத் தனித்தன்மைக் கொள்கையில் நாங்கள் ஏதாவது மாற்றங்களைச் செய்தால், அத்தகைய மாற்றங்களின் முக்கியமான அறிவிப்பை இடுகையிடுவதன் மூலமாகவோ, அல்லது உங்களுக்கு நேரடியாக ஒரு அறிவிப்பை அனுப்புவதன் மூலமாகவோ உங்களுக்கு நாங்கள் அறிவிக்கலாம். உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதைப் பற்றித் தெரிவிக்க இந்தத் தனித்தன்மைக் கொள்கையை அடிக்கடி மதிப்பாய்வு செய்ய நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்.

 

14. இந்தக் கொள்கையைப் பற்றி எங்களை எவ்வாறு தொடர்புகொள்ள முடியும்?

இந்தக் கொள்கையைப் பற்றி உங்களுக்கு கேள்விகள் அல்லது கருத்துக்கள் இருந்தால், [editor@languagename.org.in] என்ற முகவரிக்கு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.